வெர்சீனியா தமிழ்ச்சங்கம் | Virginia Tamil Sangam

தமிழர் நலன்! தமிழர் பண்பாடு!

வெர்சீனியா தமிழ்ச்சங்கம் முறையாக பதிவு செய்யப்பட்ட தமிழ் சங்கம். இந்த அமைப்பின் நோக்கம் உலகெங்கிலும் இருந்து வெர்சீனியாவில் வாழும் தமிழர்களை சாதி மத எல்லைகளை கடந்து ஒன்றிணைத்து தமிழர் நலன் மற்றும் தமிழர் பண்பாடுகளைப் பேணிக்காப்பது ஆகும்.

நோக்கம்

நமது நோக்கம் தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காவும் “உண்மையாக” உழைப்பதே ஆகும். FeTNA-வில் இணைந்தும், மற்ற தமிழ் சங்கங்களுடன் தோழமையுடனும் செயல்படுவோம். வெர்சீனியா வாழ் தமிழர்களின் நலன், கலை, பண்பாட்டுத் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவு செய்ய உதவுவோம்.

உறுப்பினர் பதிவு

உங்கள் குடும்ப உறுப்பினர் பதிவுடன், தன்னார்வு தொண்டு செய்யும் நோக்குடைய உங்கள் குழந்தைகளை இளைய தலைமுறையினர் உறுப்பினர் பதிவு செய்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.                                              நீண்டகால தன்னார்வு தொண்டு, உங்கள் குழந்தைகளின் கல்லூரி விண்ணப்பம் உட்பட பல்வேறு வகையில் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள உதவும். மேலும் எதிர்காலத்தில் தமிழையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் நலன்களையும் போற்றி வளர்க்க, அவர்களுக்கு அந்த பட்டறிவு உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

கடமைகள்

தமிழ் மொழி மற்றும் தமிழர் கலைகளை வளர்ப்பதும் அதை வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதும் நம் சங்கத்தின் முதன்மையான கடமைகள் ஆகும்.

தமிழ் மொழியிலுள்ள சங்க கால நூல்கள், இலக்கியங்கள் போன்றவற்றை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் அறிந்து தெளிய வாய்ப்புகளை ஏற்படுத்துதல். உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுத்தல்.

உலக நாடுகளில் இயங்கி வரும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்தல்.

உலகமெங்கும் இயங்கிவரும் இவ்வமைப்புகளை ஒரு குடையின்கீழ் பதிவு செய்து ஒருங்கிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்குதல்.

உலக நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம் பெற்றுள்ள தமிழ் தொடர்பான ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், அரிய கலைப் பொருட்கள் முதலிய தரவுகளைத் திரட்டுதல்.

கலைநுட்பம் வாய்ந்த சிற்பங்கள், நாட்டுப்புறப்பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் கண்டு பாராட்ட வாய்ப்பு ஏற்படுத்துதல்.

Tanjavur_Tamil_Inscription2

நிர்வாகிகள் குழு

தமிழ்ச்சங்கத்தை வழி நடத்தும் நிர்வாகிகள் குழு (காலம் 2024- 2025)

திரு . சாகிர் குசைன்
தலைவர்
திரு . சோதி முருகன்
துணைத்தலைவர்
திரு . சான் கென்னடி
செயலாளர்
திரு . செல்வம் பரமசிவன்
பொருளாளர்
திரு . இரவி சுப்பிரமணியம்
இயக்குனர்
திருமதி. மேனகா சரவணபவன்
இயக்குனர்
திரு. கண்ணன் பெருமாள்
இயக்குனர்
திரு. ஜெய் நாகசாமி
இயக்குனர்